என்.சி.சி. மாணவர்கள் ஆள்சேர்ப்பு முகாம்

காட்பாடி அரசினர் ஆண்கள் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் ஆள்சேர்ப்பு முகாம்
என்.சி.சி. மாணவர்கள் ஆள்சேர்ப்பு முகாம்
Published on

காட்பாடி

காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. மாணவர்கள் ஆள்சேர்ப்பு முகாம் நடந்தது.

முகாமுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிஸ்வரபிள்ளை தலைமை தாங்கினார்.

பள்ளி என்.சி.சி. முதன்மை அலுவலர் க.ராஜா, பட்டாலியன் சுபேதார் மேஜர் சத்பீர்சிங், சுபேதார்கள் தினேஷ்சிங், அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காட்பாடி காந்திநகர் 10-வது பட்டாலியன் நிர்வாக அலுவலர் சுந்தரம் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கலந்துகொண்டு ஆள்சேர்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் ஆசிரியர்கள் சுரேஷ்குமார், சித்ரா, உடற்கல்வி ஆசிரியர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com