நா.த.க. வேட்பாளர் கார்த்திகா கைது கண்டத்திற்குரியது: தி.மு.க. எம்.பி. கனிமொழி பதிவு

மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து முறையான ஆட்சியை நடத்த வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
நா.த.க. வேட்பாளர் கார்த்திகா கைது கண்டத்திற்குரியது: தி.மு.க. எம்.பி. கனிமொழி பதிவு
Published on: 

சென்னை,

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின் போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது கண்டத்திற்குரியது என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

த.வெ.க. அரசு

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், கழக ஆட்சியில் ஜனநாயக வழியிலேயே அவர்கள் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், த.வெ.க. அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

முறையான ஆட்சி

சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு என நாள்தோறும் மக்கள் இன்னலுக்குள்ளாகும் வேளையில், மாற்றுக் கட்சியினரை ஒடுக்குவதில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து முறையான ஆட்சியை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com