ஆண்டிப்பட்டி அருகே பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

ஆண்டிப்பட்டி அருகே பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை
Published on

ஆண்டிப்பட்டி அருகே தெப்பம்பட்டி கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நூற்றாண்டுகள் பழமையான பெருமாள், பூதேவி, சீதேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுவர்கள், கோபுர தூண்களில் பழங்கால சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியதில் கோவில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. கோவில் உள்பகுதியில் சில கல்வெட்டுகள் இருப்பதாகவும், தற்போது கோவில் சிதிலமடைந்துள்ளதால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை என்றும் கூறினர்.

இந்த கோவிலை சுற்றுவட்டார பகுதி மக்கள் இன்றளவும் வணங்கி வருகின்றனர். கோவில் சேதமடைந்துள்ளதால் கருவறையில் இருந்த பெருமாள், பூதேவி, சீதேவி சிலைகளை மட்டும் வெளிப்பகுதியில் சிறிய அளவில் கட்டிடம் கட்டி வைத்து வணங்கி வருகின்றனர். எனவே பழமை வாய்ந்த கோவிலை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com