அறச்சலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

தற்கொலை
அறச்சலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

அறச்சலூர் அருகே உள்ள துய்யம் பூந்துறை கிராமம் வேளாண் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். அவருடைய மனைவி கவிதா (வயது 36). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவிதா யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கவிதா நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com