ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தவர் சாவு

ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தவர் பரிதாபமாக இறந்து போனார்.
ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தவர் சாவு
Published on

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகிலுள்ள முல்லைக்காட்டை சேர்ந்தவர் பொன்ரத்தினம்(வயது 42). இவர் சம்பவத்தன்று புல்லாவெளி அருகே மதிகெட்டான் ஓடைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருதார். அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com