சோழவந்தான் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்- அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

சோழவந்தான் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
சோழவந்தான் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்- அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
Published on

சோழவந்தான், 

சோழவந்தான் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மாட்டு வண்டி பந்தயம்

சோழவந்தான் அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை ராமராஜபுரம் கிராமத்திலிருந்து கரட்டுப்பட்டி வழியாக பள்ளபட்டி பிரிவு வரை இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், தி.மு.க. மாநில பொது குழு உறுப்பினர் பூமிநாதன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்திக், தி.மு.க. மாவட்ட விவசாய அணி நிர்வாகி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பந்தயத்தில் பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு பந்தயம் என 3 பிரிவாக நடந்தது.

பரிசு

3 பிரிவாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவாகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ராமராஜபுரம் யாதவ மகாசபை மற்றும் யாதவர் இளைஞர் அணி, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். நிலக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் சர்மிளா, அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் குமரேசன், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com