கூடலூர் அருகேமுல்லைப்பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைக்க கோரிக்கை

கூடலூர் அருகே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கூடலூர் அருகேமுல்லைப்பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைக்க கோரிக்கை
Published on

கூடலூரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் வெட்டுக்காடு என்று அழைக்கப்படும் ஊமையன் தொழுகிராமம் உள்ளது. இங்கு 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இதனால் இவர்களில் பலர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர் இந்த கிராமத்திற்கு செல்வதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு முல்லைப்பெரியாற்றின் குறுக்கே மரப்பாலம் அமைக்கப்பட்டது.

இதன் வழியாகவே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், மருத்துவ வசதி உள்பட பல்வேறு தேவைகளுக்கும் பொதுமக்கள் கூடலூர் நகர பகுதிக்கு வந்து சென்றனர். காலப்போக்கில் அந்த மரப்பாலம் சேதம் அடைந்தது. இதையடுத்து அதனை அகற்றிவிட்டு இரும்பினால் ஆன சிறிய மேம்பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலமும் சேதமடைந்து தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. ஆங்காங்கே இரும்பு கம்பிகள் துருப்பிடித்து பாலம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது.

இதனால் பாலத்தின் வழியாக பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிதாக தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com