தேவதானப்பட்டி அருகேமின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

தேவதானப்பட்டி அருக மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்.
தேவதானப்பட்டி அருகேமின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
Published on

தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளபுரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 23). எலக்ட்ரீசியன். நேற்று இவர், அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கீழ கிடந்த வயரை எதிர்பாராதவிதமாக மோகன் மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com