கோபி அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை சாவு

கோபி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிழந்தது.
கோபி அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை சாவு
Published on

கடத்தூர்

கோபி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

3 வயது குழந்தை

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாமக்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மனைவி லட்சுமி. விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுடைய மகன் மேகநாதன் (வயது 3). ராமசாமியின் வீட்டின் முன்பு 4 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது. இதில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இதன் அருகே நேற்று மாலை மேகநாதன் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியது. இந்தநிலையில் வெகுநேரமாக மேகநாதனை காணாததால் அவனை பெற்றோர் தேடினர்.

சாவு

அப்போது தண்ணீர் தொட்டியில் குழந்தை மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவனை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மேகநாதன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com