கோபி அருகே வீடு புகுந்து 20 பவுன் நகை திருட்டு

கோபி அருகே வீடு புகுந்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோபி அருகே வீடு புகுந்து 20 பவுன் நகை திருட்டு
Published on

கடத்தூர்

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் ராமசாமி (வயது 64). கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை வழக்கம்போல் மாடிப்படி அருகே உள்ள மறைவான இடத்தில் வைத்துவிட்டு வெளியூர் சென்று விட்டார். பின்னர் மறுநாள் 16-ந் தேதி வந்து பார்த்தபோது வீட்டின் சாவி அருகில் உள்ள வீட்டின் பகுதியில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் சாவியை எடுத்து வீட்டின் உள்ளே சென்று பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள், ஆள் இல்லாததை நோட்டமிட்டு சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோவில் உள்ள நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com