கழுகுமலை அருகே விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்

கழுகுமலை அருகே விவசாய தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.
கழுகுமலை அருகே விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்
Published on

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராமலிங்கம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட உதவி செயலாளர் பாபு முன்னிலை வகித்து பேசினார். கூட்டத்தில் ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் சீரான குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி, சுடுகாட்டிற்கு செல்லும் பாதை வசதி செய்து தர வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் புதிய தலைவராக ராமலிங்கம், சயலாளராக ரஜினி முருகன், உதவித்தலைவராக காசிராஜன், உதவி செயலாளராக இயேசுராஜன், பொருளாளராக, மாரீஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் கயத்தாறு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுப்பையா நன்றியரை கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com