கோபி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

கோபி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டா
கோபி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கோபி அருகே உள்ள வடுகபாளையம் புதூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 37) சரக்கு ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். பாலகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குடிபோதையில் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com