கோபி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி

கோபி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி
கோபி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி
Published on

கோபி அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்தவர் அருக்கானி (வயது 63). கடந்த 8-ந் தேதி மளிகை கடைக்கு செல்வதற்காக குமரன் காலனி என்னும் இடத்தில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் அருக்கானி படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அருக்கானி இறந்துவிட்டார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com