மெஞ்ஞானபுரம் அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு

மெஞ்ஞானபுரம் அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் இறந்து போனார்.
மெஞ்ஞானபுரம் அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
Published on

மெஞ்ஞானபுரம்:

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரகுராம் (வயது23). இவர் திருச்செந்தூரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலையில் பணிமுடிந்து சாத்தான்குளத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நங்கைமொழி தனியார் பள்ளி அருகே சன்றபோது, இவரதுமோட்டார் சைக்கிள் மீது, எதிரே சத்தியாநகர் சண்முகவேல் மகன் ராஜவேல் ஓட்டி வந்த மோட்டார் சக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரகுராம் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுராம் இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com