மெஞ்ஞானபுரம் அருகேபெண்ணை தாக்கிய தம்பதிக்கு அபராதம்

மெஞ்ஞானபுரம் அருகே பெண்ணை தாக்கிய தம்பதிக்கு கோர்ட்டில் அபராதம் விதிக்கப்பட்டது.
மெஞ்ஞானபுரம் அருகேபெண்ணை தாக்கிய தம்பதிக்கு அபராதம்
Published on

தட்டார்மடம்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள ஜே.ஜே நகரை சேர்ந்தமுத்து மனைவி பெரியபிராட்டி. இவரது மகள் ஆட்டோவில் சென்று அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இவருடன் சென்ற பள்ளி மாணவி ஒருவரை பற்றி பேசியதாக கூறி ஜே.ஜே நகரை சேர்ந்த ராஜ்குமார், அவரது மனைவி சுமதி, ராஜ்குமாரின் தம்பி ஆனந்தகுமார் ஆகியோர் கடந்த 2017-ஆம் ஆண்டு பெரியபிராட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரை 3 பேரும் தாக்கியுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு சய்தனர். இந்த வழக்கு விசாரணை சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசி தீர்ப்பு கூறினார். அதில் பெரியபிராட்டியை தாக்கிய ராஜ்குமார், சுமதி ஆகியோருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் அரசு வக்கீல் ராஜ்மோகன் வாதிட்டார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com