மொடக்குறிச்சி அருகேவிஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை;தந்தை இறந்த துயரத்தால் விபரீத முடிவு

மொடக்குறிச்சி அருகே தந்தை இறந்த துயரத்தால் விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
மொடக்குறிச்சி அருகேவிஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை;தந்தை இறந்த துயரத்தால் விபரீத முடிவு
Published on

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி அருகே தந்தை இறந்த துயரத்தால் விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

என்ஜினீயர்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் பழனிகாடு பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். அவருடைய மனைவி ரேவதி (வயது46). இவர்களுடைய மகன் சத்தியசீலன் (26). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போது வீட்டில் இருந்தபடியே பணியை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் சிவசங்கர் கடந்த ஆண்டு நடந்த ஒரு விபத்தில் இறந்து விட்டார். தந்தை இறந்த நாள் முதல் சத்தியசீலன் மனவேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வேலா கவுண்டம்பட்டி என்ற இடத்தில் உள்ள சிவசங்கர் சமாதிக்கு சென்று, "தந்தை இல்லாத உலகத்தில் இனி உயிர் வாழ மாட்டேன்" என்று புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

கடந்த 3-ந் தேதி ரேவதி தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது சத்தியசீலன் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் சத்தியசீலன் மாலை 4 மணி அளவில் தான் விஷம் குடித்து விட்டதாக போன் செய்து ரேவதியிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த ரேவதி மற்றும் அவரது உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது சத்தியசீலன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்தியசீலன் நேற்று இறந்தார். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com