நெல்லிக்குப்பம் அருகேரெயில் மோதி வாலிபர் பலி

நெல்லிக்குப்பம் அருகே ரெயில் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
நெல்லிக்குப்பம் அருகேரெயில் மோதி வாலிபர் பலி
Published on

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தா. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடலூர் துறைமுக சந்திப்பு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் வாழப்பட்டு பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 26) என்பதும், அவர் அப்பகுதியில் தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக சென்ற ரெயில் மோதியதில் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சரத்குமார் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com