பேராவூரணி அருகே: மூதாட்டியை உயிரோடு ஆற்றுக்குள் வீசிச் சென்ற கொடூரம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மூதாட்டியை உயிரோடு ஆற்றுக்குள் வீசிச் சென்ற சம்பவம் மனிதநேயத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.
பேராவூரணி அருகே: மூதாட்டியை உயிரோடு ஆற்றுக்குள் வீசிச் சென்ற கொடூரம்
Published on

தஞ்சாவூர்

பேராவூரணியில் கண்பார்வை குறைபாடு உடையை அந்த மூதாட்டி பேருந்து மற்றும் ரெ ல் நிலையங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். 2 நாட்களாக ரெயில் நிலையம் எதிரேவுள்ள மரத்தடியில் பசி, பட்டினியோடு படுத்துக் கிடந்த மூதாட்டியை, சிலர் தூக்கிச் சென்று ஆனந்தவல்லி வாய்க்காலுக்குள் ஆடையில்லாமல் போட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

புதர் மண்டிய வாய்க்காலுக்குள் கிடந்த மூதாட்டியை பார்த்த பொதுமக்கள், சடலம் கிடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பார்த்த போது மூதாட்டிக்கு உயிர் இருந்தது தெரியவந்தது. பின்னர், மூதாட்டியை மீட்டு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com