பெரியகுளம் அருகேகல்லூரி பேராசிரியை வீட்டில் திருட முயற்சி

பெரியகுளம் அருகே கல்லூரி பேராசிரியை வீட்டில் திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகேகல்லூரி பேராசிரியை வீட்டில் திருட முயற்சி
Published on

பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்தவர் பிரீத்தா (வயது 31). தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது அன்னஞ்சி விலக்கில் குடியிருந்து வருகிறார். வாரம் ஒரு முறை மட்டுமே தாமரைக்குளத்தில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வார். வீட்டை அதே ஊரைச் சேர்ந்த மரிய பாக்கியம் என்பவர் பராமரித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மரிய பாக்கியம் வீட்டிற்கு வந்தார்.

அப்போது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பிரீத்தாவுக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் ஏதும் திருடுபோகவில்லை. இதுகுறித்து பிரீத்தா, தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருட முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com