பெரியகுளம் அருகே கார் வாங்குவது போல் நடித்து ஓட்டி சென்ற 3 பேர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே கார் வாங்குவது போல் நடித்து ஓட்டி சென்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெரியகுளம் அருகே கார் வாங்குவது போல் நடித்து ஓட்டி சென்ற 3 பேர் மீது வழக்கு
Published on

பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி ராஜேந்திரபுரத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தேனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகா கொடுத்தார். அதில் நான் அரசு வாகனங்களை ஏலம் எடுத்து அதனை விற்கும் தொழில் செய்து வருகிறேன். கடந்த மாதம் 29-ந்தேதி எனது வீட்டிற்கு தேனி அருகே உள்ள தர்மபுரியை சேர்ந்த ஈஸ்வரன், அல்லிநகரத்தை சேர்ந்த செந்தில், தாடிச்சேரி தெற்கு தெருவை சேர்ந்த பிரபாகரன் ஆகிய 3 பேர் கார் வாங்க வந்தனர். அப்போது அவாகள் கார் வாங்குவது போல் நடித்து ஓட்டி சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பி வரவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com