பெரியகுளம் அருகே கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு

பெரியகுளம் அருகே கழிவுநீர் தேங்கியதால் சுகாதாரக்கடு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் ஆய்வு செய்தார்
பெரியகுளம் அருகே கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு
Published on

பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சி அழகர்சாமிபுரத்தில் பெந்தகோஸ்தே சபை தெரு உள்ளது. இந்த தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகே உள்ள தனியார் நிலத்தில் தேங்கும் நிலை உள்ளது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்து வந்தனர். இதுகுறித்து மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில்  அந்த பகுதிக்கு கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்தனர். இதையடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அவர் உறுதியளித்தார். ஆய்வின்போது பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், மாவட்ட திட்ட இயக்குனர் தண்டபாணி, கீழவடகரை ஊராட்சி தலைவர் செல்வராணி செல்வராஜ், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com