

பூந்தமல்லி,
சென்னை பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருடைய மகள் மீனாட்சி(வயது 27). இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் (32) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 6 வயதில் ஜெயகாந்த் என்ற மகன் இருந்தான். அவன், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மீனாட்சி, அவ்வப்போது தனது கணவருடன் கோபித்துக்கொண்டு மகனுடன் கரையான்சாவடியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிடுவார்.
கடந்த 27-ந்தேதி தனது மகன் ஜெயகாந்துடன் தாய் வீட்டுக்கு வந்த மீனாட்சி, அருகில் உள்ள தனி வீட்டில் தங்கி இருந்தார். நேற்று காலை ராஜேஸ்வரி, பேரன் எங்கே? என மகள் மீனாட்சியிடம் கேட்டார்.
அதற்கு அவர், நான் அவனை கொலை செய்துவிட்டேன். என்னை காப்பாற்று என தெரிவித்தார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, அவன் எங்கே? என்றார்.
உடனே மீனாட்சி, அந்த வீட்டின் பின்புறம் தனது தாயை அழைத்துச்சென்று அங்கிருந்த தரைமட்ட தொட்டி மீது போடப்பட்டு இருந்த இரும்பு தகரங்களை அகற்றினார். அதில் தொட்டியின் உள்ளே பேரன் ஜெயகாந்த், உடல் கருகிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு ராஜேஸ்வரி அலறினார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பூந்தமல்லி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து உடல் கருகி கிடந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மகனை கொலை செய்துவிட்டு அமைதியாக அமர்ந்து இருந்த கல்நெஞ்சம் படைத்த மீனாட்சியை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-