தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்;500 வாழைகள் நாசம்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் 500 வாழைகளை நாசப்படுத்தின.
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்;500 வாழைகள் நாசம்
Published on

தாளவாடி

தாளவாடி அருகே உள்ள கரளவாடி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவர் 2 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் உதயக்குமாரின் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின.

சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து எழுந்த உதயகுமார் தாட்டத்துக்கு ஓடி வந்து பார்த்தார். அப்போது வாழைகளை யானைகள் சேதப்படுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்து விவசாயிகளை செல்போனில் உதவிக்கு அழைத்தார். அதன்பேரில் அங்கு வந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் யானைகளை விரட்டினர். ஆனால் அதிகாலை 3 வரை அட்டகாசத்தில் ஈடுபட்ட யானைகள் அதன்பின்னரே அங்கு இருந்து சென்றன. யானைகள் புகுந்ததில் சுமார் 500 வாழைகள் நாசமடைந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com