தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்

தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.
தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்
Published on

தாளவாடி

தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.

யானைகள் புகுந்தன

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஜீர்கள்ளி வனச்சரகத்தில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. தாளவாடி அருகே உள்ள சேரன்நகர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 40). இவர் தன்னுடைய 4 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் தர்மலிங்கத்தின் தோட்டத்துக்குள் புகுந்து கரும்புகளை மிதித்தும், தின்றும் நாசம் செய்தன.

பயிர்கள் நாசம்

சத்தம் கேட்டு ஓடிவந்த தர்மலிங்கம் தோட்டத்தில் யானைகள் நிற்பதை பார்த்து உடனே மற்ற விவசாயிகளை செல்போனில் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தார். அதன்பேரில் விவசாயிகள் சிலர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் சத்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் நேற்று அதிகாலை வரை பயிர்களை நாசம் செய்த பின்னரே தோட்டத்தை விட்டு வெளியேறி காட்டுக்குள் சென்றன.

யானைகள் தோட்டத்துக்குள் புகுந்ததில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் சேதம் அடைந்துவிட்டதாக தர்மலிங்கம் தெரிவித்தார். நாசம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com