தட்டார்மடம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த புள்ளிமான்

தட்டார்மடம் அருகே மர்மமான முறையில் புள்ளிமான் ஒனறு இறந்து கிடந்தது.
தட்டார்மடம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த புள்ளிமான்
Published on

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள போலையர்புரத்தில் கிறிஸ்துவ ஆலயத்துக்கு சொந்தமான இடத்தில் சுதாகர் என்பவரது முருங்கை தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் நேற்று புள்ளிமான் ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் சென்று புள்ளி மான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலையார்புரம் பகுதியை சுற்றி எவ்வித மலைப் பகுதிகளும் இல்லாத நிலையில் புள்ளிமான் இறந்து கிடந்தது மர்மமாக உள்ளது. வல்லநாடு வெளி மான் சரணாலயம் பகுதியில் இருந்து அல்லது களக்காடு மலைப்பகுதியில் இருந்து புள்ளிமான் தப்பி வந்து நாய்கள் போன்ற விலங்குகள் கடித்து இறந்திருக்குமா? அல்லது புள்ளி மானை யாரேனும் வேட்டையாடி கொண்டு வந்திருப்பார்களா? என சாத்தான்குளம் போலீசாரும், வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com