தேனி அருகேநிலத்தை அபகரித்ததாக 4 பேர் மீது வழக்கு

தேனி அருகே நிலத்தை அபகரித்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி அருகேநிலத்தை அபகரித்ததாக 4 பேர் மீது வழக்கு
Published on

தேனி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி தனலட்சுமி (வயது 49). இவர், தனது தந்தை பெயரில் இருந்த நிலம் அபகரிக்கப்பட்டதாக தேனி நிலஅபகரிப்பு சிறப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சிவக்குமார், அவருடைய மனைவி ரெங்கநாயகி உள்பட 4 பேர் மீது தேனி நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com