திருவெண்ணெய்நல்லூர் அருகே அழுகிய நிலையில் பெண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

திருவெண்ணெய்நல்லூர் அருகே அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தது தொடாபாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா.
திருவெண்ணெய்நல்லூர் அருகே அழுகிய நிலையில் பெண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
Published on

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்தலவாடி ஏரி அருகில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்?, அவரை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com