உத்தமபாளையம் அருகேமோட்டார்சைக்கிள் மோதி முதியவர் சாவு

உத்தமபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
உத்தமபாளையம் அருகேமோட்டார்சைக்கிள் மோதி முதியவர் சாவு
Published on

உத்தமபாளையம் அருகே உள்ள ஆணைமலையன்பட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் சாமிமுத்து (வயது 78). இவர், பழைய பொருட்களை தள்ளு வண்டியில் வாங்கி அதனை விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம், சாமிமுத்து தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு, கோகிலாபுரம்-வெள்ளைக்கரடு சாலையில் தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com