உத்தமபாளையம் அருகேதொழிலாளியை அரிவாளால் வெட்டிய மனைவி

உத்தமபாளையம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகேதொழிலாளியை அரிவாளால் வெட்டிய மனைவி
Published on

உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 36). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி. நேற்று முன்தினம் ஈஸ்வரனின் பெற்றோர் அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர் ஈஸ்வரியிடம் உணவு தயாரிக்குமாறு கூறினார்.

ஆனால் அவர் உணவு தயார் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரி அரிவாளால் ஈஸ்வரனை வெட்டினார். பின்னர் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com