உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்
உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
Published on

உத்தமபாளையம் அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 45). கூலித்தொழிலாளி இன்று மாலை இவா, வீட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக மின் மோட்டார் சுவிட்சை இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கோம்பை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com