நான் சங்கீதா பேசறேன்...! பரபரப்பு வாக்குமூலம்...!விழுப்புரம் அருகே- தீக்குளிக்க முயன்ற மனைவி மீது தீவைத்த கணவன்

சங்கீதா உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் சங்கீதாவை காப்பாற்ற முடியவில்லை.சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
நான் சங்கீதா பேசறேன்...! பரபரப்பு வாக்குமூலம்...!விழுப்புரம் அருகே- தீக்குளிக்க முயன்ற மனைவி மீது தீவைத்த கணவன்
Published on

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள வழுதாவூரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன்(30) இவர் ஒரு டிரைவர். இவரது மனைவி சங்கீதா (24) இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

முத்துக்குமரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால், அதனை சங்கீதா தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

ஆனால், தன் மீதான தவறை மறைக்க, முத்துக்குமார், வரதட்சணை சங்கீதாவிடம் வரதட்சணை அதிகம் வாங்கி வரும்படி தொந்தரவு செய்து உள்ளார். அவரது அக்கா கலையரசியும் இதற்கு உடந்தையாக இருந்து உள்ளார். இதற்கு சங்கீதா மறுத்துள்ளார். கடந்த 5ம் தேதியும் இந்த சண்டைதான் நடந்துள்ளது. அப்போது சங்கீதாவுக்கு பின்பக்கமாக வந்து, 2 பேரும் திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.

நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் பிள்ளைகளை கொளுத்திவிடுவதாக மிரட்டவும் தான், யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

சங்கீதா உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் சங்கீதாவை காப்பாற்ற முடியவில்லை.சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

முன்னதாக, நீதிபதி மருத்துவமனைக்கே வந்து சங்கீதாவிடம் வாக்குமூலம் கேட்டபோதும் பொய்தான் சொன்னார். தானே மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக சொன்னார்.

ஆனால், சங்கீதா சொல்வது பொய் என்று சங்கீதாவின் குடும்பத்தினருக்கு தெரியும் என்பதால், சங்கீதாவின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளனர். உண்மையை நீதிபதியிடம் சொல்லுமாறு மன்றாடி உள்ளனர். அதற்கு பிறகுதான் சங்கீதா உண்மையை சொல்லி வாக்குமூலம் அளித்து உள்ளார்.

அந்த 2 வாக்குமூலங்களுமே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. முதல் வாக்குமூலத்தில், நீதிபதி சங்கீதாவிடம் பெயர் கேட்கிறார், வயது கேட்கிறார், கணவர் பெயர், அவரது வேலை என்ன என்று கேட்கிறார், எத்தனை பிள்ளைகள், அவர்களுக்கு வயது என்ன என்று கேட்கிறார், பிறகு எப்படி இந்த தீவிபத்து நடந்தது? கணவர்தான் காரணமா? என்று கேட்கிறார். இது அனைத்திற்கும் சங்கீதா சொன்ன பொய்யான வாக்குமூலம்தான் இது:

என் பேர் சங்கீதா. 24 வயசாகிறது.. எனக்கு 3 பசங்க இருக்காங்க. ஒருத்தனுக்கு வயசு, இன்னொருத்தனுக்கு 4 வயசு, இன்னொருத்தனுக்கு ஒன்றரை வயசாகுது. என் கணவர் பெயர் முத்துக்குமார். கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகுது. 2017-ல் கல்யாணம் நடந்தது. அன்னைக்கு சிலிண்டர் வீட்டில் காலி ஆயிடுச்சு சார். அதனால் ஸ்டவ் பற்ற வைக்க மண்ணெண்ணெய் எடுத்தேன். ஸ்டவ் எனக்கு அவ்வளவாக பத்த வைக்க தெரியாது. இருந்தாலும் மண்ணெண்ணைய் எடுத்து, ஸ்டவ்வில் ஊற்றிவிட்டு, மீதி கொஞ்சம் தனியா எடுத்து வெச்சேன். அது கீழே கொட்டிவிட்டது.

அது என் சேலையில் பட்டு விட்டது ஆனால், அதை நான் கவனிக்கவில்லை.. ஸ்டவ் பற்ற வைத்ததுமே என் துணியில் நெருப்பு பற்றிக் கொண்டது. என் வீட்டுக்காரர் அப்போது தூங்கிட்டு இருந்தார். நான் கத்தி அலறியதும் அவர் ஓடிவந்து என்னை காப்பாற்றினார்.

என் வீட்டுக்காரருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, ஆரம்பத்தில் எங்களுக்குள் சண்டை இருந்தது.. ஆனால், அதுக்கப்பறம் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டார். டிரைவராக இருக்கிறார். இப்போ ஒழுங்கா இருக்கார். அவர் மீது எந்த தப்பும் இல்லை. நான்தான் மண்ணெண்ணெயை தெரியாமல் ஊற்றிக் கொண்டேன்" என்றார்.

சங்கீதா இரண்டாவதாக தந்த மற்றொரு மரண வாக்குமூலத்தில்

நான் சங்கீதா பேசறேன். என் வீட்டுக்காரர் வரதட்சணை கேட்டு என் அப்பாவை டார்ச்சர் செய்துட்டு வந்தார். என்னையும் இழுத்து போட்டு அடிப்பார். தீபாவளி முடிந்ததில் இருந்தே நிறைய குடிச்சிட்டு வந்தார்.

அதனால், மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்தி கொள்ள போவதாக சொன்னேன்.. உடனே மண்ணெண்ணையை நிஜமாகவே எடுத்து வந்து, பின்பக்கமாக வந்து ஊற்றி என்னை கொளுத்திட்டார். உடனே தண்ணியில் தூக்கி கடாசிவிட்டார். தோல் எல்லாம் எனக்கு கழண்டு வந்தது. உடம்பெல்லாம் பற்றிக்கொண்டது.

நான் கத்தினேன். எல்லாரும் ஓடிவந்து தூக்கினாங்க. ஆம்புலன்ஸ் வந்தது. என்னை அதில் ஏற்றினாங்க. உடனே இவர் என்கூட ஆம்புலன்ஸில் வரமுடியாதுன்னு சொன்னார். எல்லாரும் திட்டினபிறகு, என்கூட வந்தார்.

வர்ற வழியெல்லாம் என்னை திட்டிட்டே வந்தார். நீ மட்டும் உண்மையை சொன்னால், உன்னை கொளுத்தின மாதிரி, பசங்களையும் கொளுத்திடுவேன்ன்னு சொன்னார். அதனால்தான், நான் பயந்துட்டு, பசங்களுக்காக, யார்கிட்டயும் உண்மையை சொல்லல.

ஜட்ஜ் கிட்ட, டாக்டர் கிட்ட, போலீஸ் கிட்ட, என் வீட்டுல, எல்லார்கிட்டயும் பொய்தான் சொன்னேன். இப்ப உண்மையை சொல்றேன். என்னை என் வீட்டில் எல்லாரும் உண்மை சொல்ல சொன்னாங்க. இதுதான் நடந்த உண்மை" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com