விழுப்புரம் அருகேகுட்டையில் மூழ்கி தனியார் நிறுவன காவலாளி சாவு

விழுப்புரம் அருகே குட்டையில் மூழ்கி தனியார் நிறுவன காவலாளி உயிழந்தா.
விழுப்புரம் அருகேகுட்டையில் மூழ்கி தனியார் நிறுவன காவலாளி சாவு
Published on

விழுப்புரம் அருகே உள்ள ஜெகநாதபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலன் (வயது 53). இவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ஜெகநாதபுரத்தில் உள்ள குட்டையில் கால் கழுவ சென்றார். அப்போது அவா திடீரென தடுமாறி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com