கால்நடைத்துறையில் தேவையான மாற்றங்கள் மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் பணிபுரிய வேண்டும்

‘‘கால்நடைத்துறையில் தேவையான மாற்றங்கள் மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கிடும் வகையில் அதிகாரிகள் பணிபுரிய வேண்டும்’’ என ஆய்வு கூட்டத்தின்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
கால்நடைத்துறையில் தேவையான மாற்றங்கள் மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் பணிபுரிய வேண்டும்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் அலுவலக மாநாட்டு கூட்ட அரங்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் துறையின் செயல்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது.

இதில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் அ.ஞானசேகரன், தலைமை அலுவலக கூடுதல் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்துக்கு கால்நடைகளின் பங்கு மிக முக்கிய இடம் அளிப்பதால், தற்போது உள்ள கொரோனா பெருந்தொற்று சூழலிலும் கால்நடை வளர்போர் பாதிக்காத வகையில் கால்நடை பராமரிப்புத்துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு ஏற்ப, விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய தொழில்நுட்ப யுக்திகள் மூலம் தேவையான மாற்றங்கள் கால்நடைத்துறையில் மேற்கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கிடும் வகையில் அதிகாரிகள் பணிபுரிய வேண்டும் என்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் வேலை வாய்ப்பை அதிகரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் அடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறையில் அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட உள்ள தடைகளை உடனடியாக நீக்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்க வழி வகை செய்திடவும் அவர் அறிவுறித்தினார்.

வாழ்வாதாரத்தை முன்னேற்றி ...

புதிய தொழில்நுட்ப அணுகுமுறையின் மூலம் கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றி, அவர்களின் விருப்பத்திற்கேற்ப பெண் கன்றுகளை உருவாக்கிட வழி வகை செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com