தினக்கூலி ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை: அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விளம்பரம்

தினக்கூலி ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. #Trichy | #BusStrike
தினக்கூலி ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை: அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விளம்பரம்
Published on

சென்னை,

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர். நேற்று மாலை தெடங்கிய இவ்வேலை நிறுத்தம் இன்றும் தெடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மலைக்கோட்டை, கண்டோன்மெண்ட், தீரன் நகர், புறநகர் கிளைகளை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 99 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. #Trichy | #BusStrike

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com