நீடாமங்கலம் ரயில் நிலையத்தை நவீனமயமாக்க வேண்டும்

நீடாமங்கலம் ரயில் நிலையத்தை நவீனமயமாக்க வேண்டும்
நீடாமங்கலம் ரயில் நிலையத்தை நவீனமயமாக்க வேண்டும்
Published on

நீடாமங்கலம் ரயில் நிலையத்தை நவீனமயமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீடாமங்கலம்ரெயில் நிலையம்

நீடாமங்கலத்தில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் வழியாக காரைக்காலிலிருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், மன்னார்குடியிலிருந்து சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில், மன்னார்குடியிலிருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரெயில்கள் சென்று வருகின்றன.

காரைக்காலிலிருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில்கள், திருச்சியிலிருந்து காரைக்கால்- வேளாங்கண்ணி வரை செல்லும் பாசஞ்சர் ரயில்கள், மன்னார்குடியிலிருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில், மன்னார்குடியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயில், மன்னார்குடியிலிருந்து வாராந்திர ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், மன்னார்குடியிலிருந்து வாராந்திர திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூருவிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், கோவாவிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட ரயில்கள் சென்று வருகின்றன.

கூடுதல் குடிநீர் வசதி

சென்னை, கோவை, திருப்பதி ஆகிய ஊர்களிலிருந்து மன்னார்குடிக்கு மறுமார்க்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வருகின்றன.

இந்த ரயில்கள் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகள் நீடாமங்கலத்திலிருந்து பல ஊர்களுக்கும் சென்று வருகின்றனர்.

இவையெல்லாம் தவிர தினமும் சரக்கு ரயில்கள் நீடாமங்கலம் வழியாக சென்று வருகின்றன. நீடாமங்கலம் ரயில் நிலையத்தின் 2 மற்றும் 3-வது நடைமேடைகளின் தரைத்தளம் சமமாக இல்லாமல் உள்ளது.

இதனால் பயணிகள் இரவு நேரங்களில் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. நடைமேடை பகுதியில் முதல் நடைமேடையில் மட்டுமே குடிநீர் வசதியுள்ளது. இது போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். ஏற்கனவே இருந்தது போல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நவீன முறையில் குடிநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கட்டப்பட வேண்டும். இரவு நேரங்களில் ரயில்கள் வந்து செல்லும் வரையில் முழு அளவில் மின் விளக்குகள் எரிய வேண்டும். பயணிகள் தங்கும் அறை கட்டப்பட வேண்டும்.

நவீனமயமாக்க வேண்டும்

நடைமேடைபகுதிகளில் கூடுதல் மேற்கூரைகள் அமைத்து பயணிகள் உட்கார கூடுதல் வசதி செய்து தர வேண்டும். நான்காவது தண்டவாளப் பாதை அமைத்து சரக்கு ரயில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பயணிகளின் நலன்கருதி நீடாமங்கலம் ரயில் நிலையத்தை நவீனமயமாக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com