‘நீட்’ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு

‘நீட்’ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
‘நீட்’ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு
Published on

சென்னை,

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்று (நேற்று) 77 ஆயிரத்து 266 ஆக உயர்ந்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை புதிய உச்சங்களை எட்டக்கூடும். இத்தகைய சூழலில் நீட் மற்றும் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுகளை நடத்துவது சரியாக இருக்காது.

நுழைவுத்தேர்வு என்ற பெயரில் 25 லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்களை ஆங்காங்கே கூட்டுவது கொரோனா நோய் பரவல் அதிகரிப்பதற்கு தான் வழி வகுக்கும். எனவே களச்சூழலை கருத்தில்கொண்டு நீட் மற்றும் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com