மதியம் நீட் தேர்வு: அச்சம் காரணமாக மேலும் ஒரு மாணவர் தற்கொலை

தருமபுரியில் நீட் தேர்வு எழுத அச்சம் காரணமாக மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மதியம் நீட் தேர்வு: அச்சம் காரணமாக மேலும் ஒரு மாணவர் தற்கொலை
Published on

தருமபுரி,

மதியம் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நீட் தேர்வு எழுத அச்சம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வு

2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 3-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஆனால், நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக அந்த தேர்வு ரத்துசெய்யப்பட்ட நிலையில், இன்று மதியம் நீட் மறு தேர்வு நடக்க உள்ளது.

மாணவர் தற்கொலை

இதற்கிடையே, நீட் தேர்வு எழுத அச்சம் காரணமாக தமிழக உட்பட இந்தியா முழுவதும் பல நகரங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த வெற்றியானந்தம் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீட் தேர்வு எழுத அச்சம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஏற்கெனவே 3 முறை தேர்வு எழுதி தோல்வியடைந்த வெற்றியானந்தம், 4-வது முறையாக இன்று தேர்வு எழுத இருந்த நிலையில், தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மதியம் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com