

சேலம்,
நீட் தேர்வையொட்டி, மாணவர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் நாளை நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சின்னசேலம்-சேலம் மற்றும் திருப்பத்தூர்-சேலம் இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சின்னசேலத்தில் இருந்து நாளை காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், 11.20க்கு சேலம் வந்தடையும். அதேபோல, திருப்பத்தூரில் இருந்து ஞாயிறு காலை 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், காலை 10.45க்கு சேலம் வந்தடையும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.