நீட் விலக்கு மசோதா; அதிமுகவும், பாஜகவும் நாடகம் நடத்துகின்றன - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டு அதிமுகவும், பாஜகவும் நாடகம் நடத்துவதாக அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதா; அதிமுகவும், பாஜகவும் நாடகம் நடத்துகின்றன - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Published on

சென்னை,

நீட் விவகாரம் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், 2010 ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோதே, காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டிருந்தால் இன்று 'நீட்' என்ற பிரச்சனையே வந்திருக்காது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் தோல்வியை மறைக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கை இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி இருந்தவரை நீட் தேர்வு நுழையவில்லை. மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்றிருக்க வேண்டும்.

நீட் விலக்கு மசேதாவை கிடப்பில் பேட்டு அதிமுகவும், பாஜகவும் நாடகம் நடத்துகின்றன. மேலும், ஐகோர்ட்டில் நீட் தேர்வுக்கு தடை வாங்கியது திமுக ஆட்சி தான். மீண்டும், மீண்டும் பொய்யை சொல்லி மக்களை ஏமாற்றும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com