நெல்லை: சட்ட விரோதமாக 53 மது பாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது


நெல்லை: சட்ட விரோதமாக 53 மது பாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது
x

நெல்லை மாநகரில் நயினார்குளம் மார்க்கெட் சாலை மற்றும் முருகன்குறிச்சி வாய்க்கால்பாலம் அருகேயுள்ள பகுதியில் போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் நயினார்குளம் மார்க்கெட் சாலை அருகே நேற்று முன்தினம் (29.04.2025) தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரகுமார் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டை, கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் செல்வராஜ் (வயது 28) என்பவரிடமிருந்து 26 மது பாட்டில்கள், பணம் ரூ.539 ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து, கைது செய்து விசாரணை செய்தனர்.

இதேபோல் திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி வாய்க்கால்பாலம் அருகில் நேற்று முன்தினம் (29.04.2025) பாளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்கபவள்ளி மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட தச்சநல்லூர், கரையிருப்பு, சுந்தராபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆறுமுகநயினார்(56) என்பவரிடமிருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து, கைது செய்து விசாரணை செய்தனர்.

1 More update

Next Story