நெல்லை: கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது

நெல்லையில் 2 பேர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 60 கிராம் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை: கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது
Published on

நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் தலைமையிலான காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்குளம் விலக்கு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த செங்குளத்தைச் சேர்ந்த தங்கமாரியப்பன் (வயது 29), ஆதிமூலபெருமாள் (40) ஆகிய இருவரையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 60 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தங்கமாரியப்பன், ஆதிமூலபெருமாள் இருவரையும் நேற்று கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com