நெல்லை: கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நெல்லையில் இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை: கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
Published on

நெல்லை மாவட்டம், தேவர்குளம் அருகே சுப்பையாபுரம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆசைதம்பி மகன் கண்ணன் (வயது 19), மேல தாழையூத்து, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிதுரை (வயது 22) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்சொன்ன 2 பேர் மீதும் மானூர் வட்ட இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோல், நெல்லை மாவட்டம் ராதாபுரம், வடக்கு வள்ளியூரை சேர்ந்த கண்ணன் மகன் சித்ரவேல்பாண்டி (வயது 34), சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது பணகுடி இன்ஸ்பெக்டர் ராஜாராம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேற்சொன்ன மானூர், பணகுடி இன்ஸ்பெக்டர்களின் வேண்டுகோளின்படி, மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று (26.03.2025) பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com