நெல்லை: உவரி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போயுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள குட்டம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவராம் (வயது 51). சுவீட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

இதேபோன்று அருகில் உள்ள அருள் லிங்கம் என்பவர் வீட்டிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது. அவர் சென்னையில் வசித்து வருகிறார். இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்த பிறகு அங்கு திருட்டு நடந்துள்ளதா என்பது தெரிய வரும். இது பற்றி சிவராம் உவரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com