நெல்லை: காட்டு யானைகள் அட்டகாசத்தால் தென்னை, நெற்பயிர்கள் சேதம்


நெல்லை: காட்டு யானைகள் அட்டகாசத்தால் தென்னை, நெற்பயிர்கள் சேதம்
x

மணிமுத்தாறு அருகே காட்டு யானைகள் தோட்டத்தில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே மடத்தானை பகுதியில் நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன. அப்போது அங்குள்ள வயல்பகுதியில் உள்ள நெற்பயிர்களை சேதப்படுத்தியதுடன், அருகிலுள்ள தோட்டங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களையும் சேதப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் திரும்பி சென்றது. இதையடுத்து நேற்று காலை தோட்டத்துக்கு சென்ற விவசாயிகள் சேதமடைந்த பயிர்கள், தென்னை மரங்களை பார்த்து வேதனை அடைந்தனர். கடந்த சில நாட்களாகவே யானைகள் கூட்டம் அந்த பகுதிகளில் சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் வயல்களுக்கு செல்லவும், அங்கு தங்கவும் அச்சமடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘யானைகள் அட்டகாசம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது. இதனால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே வனத்துறை சார்பில் சோலார் மின்வேலி அமைத்தும், அகழிகள் வெட்டப்பட்டு இருந்தாலும் யானைகள் அவற்றை கடந்து விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கின்றன. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே மலையடிவார கிராமங்களில் கூட்டமாக சுற்றித்திரியும் யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

1 More update

Next Story