நெல்லை: அரசுப் பேருந்து-லாரி மோதிய விபத்தில் நடத்துநர் உயிரிழப்பு - போக்குவரத்துத்துறை அமைச்சர் இரங்கல்

நடத்துநரின் உயிரிழப்பு, போக்குவரத்துக் கழகத்திற்கும், அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விஜய் தமிழன் பார்த்திபன்
Published on: 

சென்னை,

அரசுப் பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்த, திருநேல்வேலி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த நடத்துநர் ஏ.அஜீத் மெல்வின் ஆர்தரின் குடும்பத்தினருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அரசுப் பேருந்து-லாரி மோதி விபத்து

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

திருநெல்வேலி மாவட்டம், பிராஞ்சேரி அருகே இன்று (08.10.2026) அரசுப் பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பேருந்தில் முதுநிலை நடத்துநராக பணிபுரிந்த திருநெல்வேலி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், வள்ளியூர் பணிமனையைச் சார்ந்த ஏ.அஜீத் மெல்வின் ஆர்தர் (வயது-52) சம்பவ இடத்திலே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

அமைச்சர் இரங்கல்

முதுநிலை நடத்துநர், ஏ.அஜீத் மெல்வின் ஆர்தரின் உயிரிழப்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும், அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஏ.அஜீத் மெல்வின் ஆர்தரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com