நெல்லை இரட்டை கொலை: தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பே இல்லாமல் ஆகிவிட்டது - கனிமொழி

நெல்லையில் முன்பகை காரணமாக தந்தையும், மகனும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நெல்லையில் முன்பகை காரணமாக பைக் மீது காரை மோதவிட்டு மகனை (5 வயது) படுகொலை செய்த கும்பல், தந்தையின் தலையை அரிவாளால் வெட்டி துண்டித்து நடுரோட்டில் வைத்துவிட்டு சென்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிட்டது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தையும் அவரது 5 வயது மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிட்டது. தவெக அரசு, முன்விரோதம் காரணமாகத் தொடரும் இப்பிரச்சனையில் மெத்தனமாக செயல்படாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அப்பகுதியில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com