நெல்லை: இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை கடத்திய டிரைவர் கைது

டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நெல்லை: இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை கடத்திய டிரைவர் கைது
Published on

நெல்லை,

நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 17 வயது சிறுமியை கடத்திச் சென்ற டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்

நெல்லையில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 17 வயதில் சிறுமி இருக்கிறார். இவர் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு, ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவர் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருக்கும் நிலையில், அவருடன் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங் கண்ணியை சேர்ந்த முனியப்பன் மகன் டிரைவரான செல்வராஜ் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி சிறுமியுடன் அடிக்கடி செல்போனில் பேச தொடங்கி உள் ளார். தொடர்ந்து அந்த சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

கடத்தல்-கைது

இதற்கிடையே சம்பவத்தன்று சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், தச்சநல்லூர் போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மாயம் என வழக்குப்பதிவு செய்து தேடியபோது, அந்த சிறுமியை செல்வராஜ் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வேளாங்கண்ணிக்கு சென்று சிறுமி மற்றும் செல்வ ராஜை பிடித்து வந்தனர். பின்னர் செல்வராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com