நெல்லை ஆணவக்கொலை வழக்கு: கொலையாளி சுர்ஜித்தின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்

சுர்ஜித்தின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை ஆணவக்கொலை வழக்கு: கொலையாளி சுர்ஜித்தின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்
Published on

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டையில் கடந்தாண்டு கவின் செல்வகணேஷ் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலைவழக்கில், கவினின் தோழியின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை எஸ்.ஐ.சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி, உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் எஸ்.ஐ.சரவணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோவையில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com