நெல்லை: குடும்ப தகராறில் மனைவியின் கையை கடித்து குதறிய நபர் கைது

காயமடைந்த மாலா சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நெல்லை: குடும்ப தகராறில் மனைவியின் கையை கடித்து குதறிய நபர் கைது
Published on: 

நெல்லை,

கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி செந்தில் ஆண்டவர் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மணிகண்டன் (வயது 32). இவர் தற்போது கடையநல்லூர் இல்லத்தார் வடக்குத் தெருவில் வசித்து வருகிறார்.

குடும்ப தகராறு

இவருக்கும். இவரது மனைவி மாலா (30) என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை

அப்போது ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது மனைவி மாலாவின் கையை கடித்து குதறினார். இதில் மாலா காயமடைந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மாலா அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.

X