நெல்லை: இந்திய இறையாண்மைக்கு எதிராக முகநூலில் பதிவிட்டவர் கைது


நெல்லை: இந்திய இறையாண்மைக்கு எதிராக முகநூலில் பதிவிட்டவர் கைது
x

பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷேக்முகமது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஷேக்முகமது (வயது 48) தனது முகநூல் பக்கத்தில் இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தவறான பதிவுகளை பதிவிட்டிருந்தார். இது சம்பந்தமாக பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் மேற்சொன்ன வழக்கு சம்பந்தமான புலன் விசாரணையில் ஷேக்முகமதின் முகநூல் பக்கத்திலுள்ள பதிவுகள் அனைத்தும் அவரின் கைப்பேசியிலிருந்து அவரால் பதிவேற்றம் செய்யப்பட்டது என தெரியவந்ததால் ஷேக்முகமது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

1 More update

Next Story